Loading...
முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்! சென்னை மெட்ரோ பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சென்னை மெட்ரோ பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்! சென்னை மெட்ரோ பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
03:07 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் 4-ல் பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டிற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்குப் பிறகு, பயணச்சீட்டு வாங்கி தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோருடன் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

சிறப்பம்சங்கள்

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தின் சிறப்பம்சங்கள்

சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் புதிய வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தனித்துவமான இரட்டை அடுக்கு மேம்பாலக் கட்டமைப்பும், ஓட்டுநரில்லா ரயில் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் அதிநவீன சிக்னல் முறைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வழித்தடம் சென்னை நகரின் மேற்குப் புறநகர் பகுதிகளை நகர மையப் பகுதியுடன் மிக விரைவாக இணைக்கப் பெரிதும் உதவும்.

இயக்க நேரம்

மெட்ரோ ரயில் இயக்க நேரங்கள் மற்றும் நிலையங்கள்

இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பயணிகள் சேவை தொடங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை (அக்டோபர் 12) முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரு மார்க்கங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.

இந்தப் புதிய வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், அரசினர் மருத்துவமனை, கரையான்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

ADVERTISEMENT

பிரமாண்ட ரோட்ஷோ

விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு & பிரமாண்ட ரோட்ஷோ

முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, வாகனத்தில் நின்றவாறே பேரணியாக சென்று மக்களைப் பார்த்து கையசைத்தார்.

சாலைப் பகுதிகளில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்குத் தமிழக பாஜக சார்பில் சிறப்பான கலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT