Loading...
மக்களே உஷார்! கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை எச்சரிக்கை; அக்டோபர் 15 வரை மழை தொடரும்
கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை எச்சரிக்கை

மக்களே உஷார்! கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை எச்சரிக்கை; அக்டோபர் 15 வரை மழை தொடரும்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
07:51 am

செய்தி முன்னோட்டம்

குமரிக்கடல் பகுதியிலிருந்து வட உள் கர்நாடகா வரை தமிழகம் வழியாக செல்லும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் 15 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பலத்த காற்று

வளிமண்டல சுழற்சி மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம்

குமரிக்கடலில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் மிதமான மழை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மழை எச்சரிக்கை

அக்டோபர் 13 முதல் 15 வரை தொடரும் மழை எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் அக்டோபர் 13 முதல் 15 வரை லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT