உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 12) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
எம்.ஜி. ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர், மன்னாம்பாளையம், வலசுப்பாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம்.
திருப்பூர் மாவட்டம்: (உடுமலைப்பேட்டை)
இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கடபுரம், துங்கவி, மாதரத்தி, ராமகவுண்டன்புதூர், போல்டராபட்டி, கே.கே. புதூர்.
சேலம் மாவட்டம்:
ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சவூரியூர், சேலவடை, பண்ணிக்கனூர், கட்டிநாயக்கன்பட்டி, கட்டாம்பட்டி, ஆரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி.
புதுக்கோட்டை மாவட்டம்:
வடுகபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும்.