Loading...
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சீருடையில் பாடிகேம்கள்! CJP போராட்டத்தால் உச்சக்கட்ட பதற்றம்
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சீருடையில் பாடிகேம்கள்

டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சீருடையில் பாடிகேம்கள்! CJP போராட்டத்தால் உச்சக்கட்ட பதற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ள ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தடுக்கத் தலைநகர் டெல்லியில் 35,000-க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்தியத் துணை ராணுவப் படையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முறை காவல்துறையினர் மீதான போலி குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கவும், வன்முறைகளைப் பதிவு செய்யவும் இருட்டிலும் இயங்கும் நவீன பாடிகேம்கள் அவர்களின் சீருடைகளில் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து முடக்கமும்

கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்ட நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் தடுத்து நிறுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தலைநகரில் உள்ள 46 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து அடைப்பதற்காகச் சத்ரசால் மைதானம், ராஜீவ் காந்தி மைதானம் உட்பட ஆறு தற்காலிக சிறை மையங்களை டெல்லி காவல்துறை உருவாக்கித் தயார் நிலையில் வைத்துள்ளது.

அரசாங்கம் பயப்படுகிறது?

CJP நிர்வாகி குற்றச்சாட்டு

போராட்டத்தில் பங்கேற்க மும்பையிலிருந்து டெல்லி புறப்பட்ட CJP முன்னணி நிர்வாகி அபிஜீத் திப்கே கூறுகையில், "நாட்டில் உள்ள இளைஞர்களைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.

எங்களை கைது செய்தாலும் அல்லது UAPA சட்டம் போட்டாலும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்." என காட்டமாகக் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

ஆளில்லா விமானங்கள்

முக அடையாளத் தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லா விமானங்கள்

டெல்லி காவல்துறையின் உத்தரவின்படி அனுமதியின்றி போராட்டம் நடத்த முயலும் நபர்களைக் கண்ட இடத்திலேயே கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய டெல்லி முழுவதும் முக அடையாளத் தொழில்நுட்பக் கேமராக்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள், கட்டிடக் கூரை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் கேமராக்கள் மூலம் நிலவரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஜன்பத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT