Loading...
டெல்லி மெட்ரோ மூடல் & தலைவர்கள் கைது: அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு விசாரணை
உச்ச நீதிமன்றம்

டெல்லி மெட்ரோ மூடல் & தலைவர்கள் கைது: அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு விசாரணை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
05:36 am

செய்தி முன்னோட்டம்

தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த போராட்டத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் முடக்கப்பட்டதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டதற்கும் எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர சிறப்பு விசாரணையை நடத்துகிறது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கிறது. விடுமுறை நாளில் நடைபெறும் இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

வழக்கு பின்னணி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பின்னணி

முன்னதாக அக்டோபர் 9 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், போராட்டங்கள் காரணமாக டெல்லிக்கு வரும் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என காட்டமாகக் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் அக்டோபர் 10 அன்று 46-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுப் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் கூறி ஒன்றிய உள்துறைச் செயலாளர், டெல்லி போலிஸ் கமிஷனர் மற்றும் டெல்லி மெட்ரோ தலைவருக்கு எதிராக வழக்குரைஞர் சைலேந்திர மணி திரிபாதி நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மனு தாக்கல்

எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுதலைக் கோரி மனு

மறைமுகக் கட்டுப்பாடுகள் மற்றும் தலைவர்கள் கைதுக்கு எதிராகத் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் மூத்த வழக்கறிஞருமான மேனகா குருசுவாமி ஹேபியஸ் கார்ப்பஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லிக்கு வருகை தந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, எம்பிக்கள் டெரெக் ஓ பிரையன், சாகேத் கோகலே, டோலா சென் மற்றும் பிரதிமா மண்டல் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முடக்கத் தடுப்புக் காவலைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கைது

அமைதியான போராட்டக்காரர்கள் & பத்திரிகையாளர்கள் கைது

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் டெல்லி காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானவை என வாதிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இந்த அவசர விசாரணையில் உச்ச நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பு அல்லது உத்தரவுகள் டெல்லி காவல் துறைக்கு நெருக்குதலைக் கொடுக்கும் என போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT