இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை: மேடையில் கண்கலங்கிய தவெக வேட்பாளர் சத்யபாமா, ஆறுதல் கூறிய முதலமைச்சர் விஜய்
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், எதிர்த்தரப்பினர் தன்னை பெண் என்றும் பாராமல் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 30) சேலம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லோக்கல் இரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! அக்டோபர் 1 முதல் ஐடி கார்டு கட்டாயம்: மத்திய இரயில்வே
மும்பை புறநகர் மற்றும் மத்திய ரயில்வே மண்டலம் முழுவதும் பயணிக்கும் பயணிகள் அக்டோபர் 1 முதல் 31 வரை தங்களது அசல் அடையாள அட்டைகளை (ID) தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் தவெக கட்சி அலுவலகமா? விஜய் கட்சியின் அதிகாரப்பூர்வ விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் ரசிகர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் தவெக-வின் முதல் கிளையை தொடங்கியுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
படிவம் 6-ல் சர்ச்சைக்குரிய பிரகடன கேள்வி நீக்கம்: எதிர்ப்பிற்கு அடிபணிந்த தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப் பயன்படும் படிவம் 6-ல் இணைக்கப்பட்டிருந்த சிறப்பு தீவிர திருத்த (SIR) பிரகடனப் படிவத்தை, SIR நடைமுறை முடிவடைந்த மாநிலங்களின் ECINET போர்ட்டலில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
நாளை முதல் ரேஷன் கார்டுகள் தற்காலிக முடக்கம்: 1.58 கோடி பயனாளிகளுக்குப் பாதிப்பா? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை பெறாத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
யூடியூபர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: பெண் செய்தி வாசிப்பாளர் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சன் டிவி முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி தொடர்ந்த அவதூறு மற்றும் துன்புறுத்தல் வழக்கில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் புட்காம் பகுதியில் பாதுகாப்புப் படை அதிரடி: லஷ்கர்-ஏ-தொய்பா தளபதி, பஹல்காம் தாக்குதலின் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் பிரச்சாரம்: கோவை - தாராபுரம் வரை முக்கிய போக்குவரத்து மாற்றம்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை மீது தாக்குதல்: ஹவில்தார் பலி, 4 பேர் காயம்
அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில், இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவில்தார் ஒருவர் வீரமரணமடைந்தார்.
ரூ.2.8 லட்சம் மாதச் சம்பளம்: போலி சான்றிதழ் கொடுத்து VP-ஆன நபர் மாட்டி கொண்ட கதை!
மத்திய பிரதேச மாநிலத்தில் போலியான பணி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்து, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் குழுத் துணைத் தலைவர் (Group Vice President) பதவியை பெற்று மாதம் ₹2.8 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வானிலை அப்டேட்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தமிழக அரசு உறுதியளித்ததை தொடர்ந்து சம்மேளனம் முடிவு
கட்டண உயர்வை வலியுறுத்தி செப்டம்பர் 30-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்படவிருந்த ஒரு நாள் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம், தமிழக அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அளித்த உறுதியைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க FBI தேடும் பட்டியலில் கோல்டி பிரார்! இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதிகள் யார்?
பஞ்சாபை சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியான சதிந்தர்ஜித் சிங் என்ற கோல்டி பிராரை அமெரிக்காவின் FBI அமைப்பு தனது மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்ற மனு
இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கூட்டு முடிவெடுக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரீல்ஸில் நகைகளைக்காட்டி சிக்கிய நாகர்கோவில் யூடியூபர்; 118 சவரன் கொள்ளையடித்த 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணத்தில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா என்பவரது வீட்டில் புகுந்து, 118 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அக்டோபர் தொடர் விடுமுறை: 3,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சமூக வலைதளங்களில் சிறுவர்களுக்கு தடை? உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தன்னிச்சையாக சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதைத் தடுக்கும் வகையில், சட்டப்பூர்வ விதிகளை உடனடியாக வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'நாளை குடை கண்டிப்பாக தேவை!' மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்
வடக்கு உள் கர்நாடகம் முதல் தெற்கு உள் கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் மழை நீடிக்கிறது.
CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழி விதியிலிருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய மும்மொழிக் கொள்கையிலிருந்து நடப்பு கல்வியாண்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் காற்றுமாசு தடுப்பு நடவடிக்கை: பார்க்கிங் கட்டணம் இருமடங்கு உயர்வு, 50% WFH அமல்
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் தீவிரமடையும் காற்று மாசுபாட்டை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி அரசு அதிரடி கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; கொள்முதல் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
பேருந்துகள் ஓடாது! தமிழகத்தில் 24 மணி நேரம் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு; முழு விபரம்
தமிழ்நாட்டில் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பயணத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளியிடுவதும் ரத்து செய்வதும் தொடர்கதையா? தமிழக அரசின் வரிசையான அரசாணை ரத்துகள்; விரிவான பின்னணி
தமிழக அரசு சமீபகாலமாக பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான அரசாணைகளை அவசர அவசரமாக வெளியிட்டு, பின்னர் மக்களின் எதிர்ப்பிற்குப் பயந்து அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று வருகிறது.
உபி-யில் பெருமழை: 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்ததைத் தொடர்ந்து, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் கடந்த 48 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் தண்ணீர் வரும்? வைகை அணை வறண்டதால் 5 மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்ததன் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான எல் நினோ வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
லேண்டிங் நேரத்தில் ஆட்டோபைலட் ஆஃப்! போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு; இந்தியாவில் 96 விமானங்கள் பாதிப்பு
உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 மேக்ஸ் ரக விமானங்களின் தானியங்கி வழிசெலுத்தல் அமைப்பில் மென்பொருள் கோளாறு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 29) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி-என்சிஆர் பாலியல் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள NCR பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் இயங்கும் ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
தமிழக வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும்?
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மதுரை, திருச்சி, ஈரோடு, நாகை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சதமடித்துள்ள நிலையில், இன்று முதல் அக்டோபர் 1 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை ஐஐடி-யில் இடஒதுக்கீடு முறைகேடு? எஸ்சி, எஸ்டி, ஓபிசி பேராசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு
மும்பை IIT-ல் தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது RTI-ன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: ரூ.8 கோடி மண் திருட்டு புகாரில் நடவடிக்கை
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி மதிப்பிலான மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடும் எதிர்ப்புக்குப் பின் பணிந்தது தமிழக அரசு: RTI விலக்கு அளிக்கப்பட்ட சர்ச்சை அரசாணை வாபஸ்
தமிழக அரசின் பொது (சட்டம் - ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக கிளம்பிய கடுமையான எதிர்ப்புகளை தொடர்ந்து, திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கை: பிரதமர் மோடி மன்கி பாத் உரை
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கொள்கையை கடுமையாகப் பின்பற்றி வருவதாகவும், அதற்கு 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கே மிகச்சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் LPU பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம், கட்டிடம் தீக்கிரை: மாணவி வன்கொடுமை வதந்தியால் வன்முறை
பஞ்சாபில் உள்ள லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழக (LPU) வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலை தொடர்ந்து மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.