Loading...
அருணாச்சலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை மீது தாக்குதல்: ஹவில்தார் பலி, 4 பேர் காயம்
அருணாச்சலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை மீது தாக்குதல்

அருணாச்சலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை மீது தாக்குதல்: ஹவில்தார் பலி, 4 பேர் காயம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில், இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவில்தார் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்துள்ளனர். நம்பாங் வட்டம், நம்பாங் நல்லா பகுதியில் எல்லை வேலி அமைக்கும் பணிக்கு அருகே ரோந்து சென்ற படைப்பிரிவினர் மீது காலை 6:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 42 வயதான ஹவில்தார் ஜான்கோகை குக்கி சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தார். இந்த தாக்குதலை இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வரும் NSCN-K-YA என்ற நாகா தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் வேட்டை

தீவிரமடையும் தேடுதல் வேட்டை

தாக்குதலை தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1,643 கிலோமீட்டர் நீளமுள்ள முழு இந்திய-மியான்மர் எல்லையிலும் வேலி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, சாங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்களில் இவ்வாண்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், எல்லைப் பகுதிகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளால் இந்த திட்டத்திற்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் நிலவி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT