உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை(செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பொறையார் துணை மின்நிலையம்:
பொறையார் டவுன், தில்லையாடி, சாத்தனூர், தரங்கம்பாடி, கூட்டுக் குடிநீர் திட்டம் (CWSS I, II), சங்கரன்பந்தல், திருக்கடையூர்.
கிடாரங்கொண்டான் துணை மின்நிலையம்:
செம்பனார்கோவில், எம்.ஆர்.எம், பூம்புகார், மாணிக்ககிராமம், ஆக்கூர், திருவாலி.
இலந்தைகுடம் துணை மின்நிலையம்:
புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அண்ணிமங்கலம், வெங்கனூர்.
கண்டமனூர் துணை மின்நிலையம்:
தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தர்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.