உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்
உடுமலைப்பேட்டை: உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, சு.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம்