Loading...
டெல்லி-என்சிஆர் பாலியல் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை
பாலியல் அநீதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது

டெல்லி-என்சிஆர் பாலியல் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 28, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள NCR பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் இயங்கும் ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த கொடூரச் சம்பவங்கள் 2012-இல் நடைபெற்ற 'நிர்பயா' வழக்கை மீண்டும் வேதனையுடன் நினைவூட்டுவதாகக் கவலை தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு அமைப்புகளின் முழுமையான தோல்வியையே இந்நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

உத்தரவுகள்

நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள்

பொது இடங்கள் பாதுகாப்பற்ற மண்டலங்களாக மாறுவதைத் தடுக்க உடனடியாக பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

"பூங்காக்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது இடங்கள் போதிய வெளிச்சமின்மை மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லாததால் குற்றப் பின்னணி கொண்டவர்களின் ஆபத்தான பகுதிகளாக மாற அனுமதிக்க முடியாது".

"வெறுமனே அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது; தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மற்றும் பொறுப்புக்கூறலை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்".

இச்சம்பவங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பாக தனி வழக்காக பதிவு செய்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவலை

பிராந்திய பாதுகாப்பில் தீவிரக் கவலை

இயங்கும் பேருந்துகளில் சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பொதுப் பூங்காக்களில் நடக்கும் குற்றங்கள் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளன.

இச்சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இத் தலைையீடு, பாதுகாப்பு நிர்வாகத்தை மேம்படுத்தவும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் வழிவகுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT