Loading...
இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்ற மனு
அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்ற மனு

இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்ற மனு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கூட்டு முடிவெடுக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் விகாஸ் சிங் இக்கோரிக்கையை முன்வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இதன் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ மட்டுமே எடுக்கப்பட வேண்டும். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக முடிவுகளை அறிவித்து ஆணையிடுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை இடைநீக்கம் செய்யக் கோரி Quo Warranto மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிக்கையும் எதிர்ப்புகளும்

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான உத்தரவுகளில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

பல முக்கிய முடிவுகள் தங்களது பரிந்துரையோ அல்லது அனுமதியோ இன்றி வெளியிடப்பட்டதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

நடைமுறைகளை வரைவு செய்யும் போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் விவாதங்கள் வழக்கமான ஒன்றே என்றும், முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT