Loading...
'நாளை குடை கண்டிப்பாக தேவை!' மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை

'நாளை குடை கண்டிப்பாக தேவை!' மதுரை, ஈரோடு, நாமக்கல்லிற்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
08:12 pm

செய்தி முன்னோட்டம்

வடக்கு உள் கர்நாடகம் முதல் தெற்கு உள் கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் மழை நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் நாளை (செப்டம்பர் 29) மதுரை, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மேற்குத் தொடர்ச்சி மழை

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பிற மாவட்டங்களின் மழை நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும்.

அடுத்த நாட்கள்

அடுத்தடுத்த நாட்களுக்கான (செப். 30, அக்டோபர் 1) வானிலை முன்னறிவிப்பு

செப்டம்பர் 30 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய பரவலான கோடைக்குப் பிந்தைய மழைப் பொழிவு காணப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அறிக்கை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, நாளை வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் வழக்கமான வெப்பமும், மாலை வேளையில் மழை காரணமாகக் குளிர்ந்த சூழலும் நிலவ வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT