Loading...
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், விவசாயக் கடன்; தமிழக கூட்டுறவுத்துறையின் மெகா கடன் முகாம்கள்
தமிழக கூட்டுறவுத்துறையில் மெகா கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், விவசாயக் கடன்; தமிழக கூட்டுறவுத்துறையின் மெகா கடன் முகாம்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2026
01:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் குறைந்த வட்டியில் எளிதாக கடன் உதவிகளை வழங்கும் வகையில், கூட்டுறவுத்துறை சார்பில் வாரந்தோறும் மெகா கடன் மேளா மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகள், சிங்கப்பெண்கள்(மகளிர்) கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்கள். வெள்ளிக்கிழமைகள், ஆதிதிராவிடர்கள் கடன்கள், நடுத்தர கால விவசாயக் கடன்கள், வர்த்தகத் தொழில் கடன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடன்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் திருநங்கையருக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக்கடன் திட்டங்களுக்கான முகாம்கள். கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்கள்

கடன் திட்டங்களின் சிறப்பம்சங்கள் & வட்டி விகிதங்கள்

TAHDCO கடன்கள், சுயதொழில் தொடங்க உதவும் இக்கடன்களுக்கு அரசு தரப்பில் 35% முதல் 50% வரை மானியமும், 6% வட்டியும் வழங்கப்படுவதுண்டு.

கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வட்டி விகிதம் ஆண்டிற்கு சுமார் 8.25% முதல் 9.50% வரை (சிபில் மதிப்பெண்ணைப் பொறுத்து) வசூலிக்கப்படுகிறது.

நடுத்தர கால விவசாயம் மற்றும் வணிகக் கடன்களுக்கு வட்டி விகிதம் ஆண்டிற்கு சுமார் 10.80% முதல் 12% வரை இருக்கும்.

தனியார் நிதி நிறுவனங்களை விட இதில் கடன் பெறுவது பொதுமக்களுக்கு மிகப்பெரிய லாபத்தைத் தரும்.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது.

தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டி விகிதச் சீரமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT