Loading...
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் மனு மீது உயர்நீதிமன்றம் கேள்வி
அன்பில் மகேஷ் மனு மீது உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் மனு மீது உயர்நீதிமன்றம் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2026
02:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் தரப்பில்,"ஆளுநரின் முறையான ஒப்புதல் இல்லாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது" என வாதிடப்பட்டது. இதனைக்கேட்ட நீதிபதி,"திமுகவை பொறுத்தவரை கவர்னர் பதவி என்ற தேவையில்லாத ஒன்றுதானே? கவர்னர் பதவியை ஆட்டுக்கு தாடியை போன்றது என்று ஒப்பீடு செய்வதுதானே திமுக வழக்கம்? அப்படியிருக்க, கவர்னரின் அதிகாரம் பற்றி எல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது?" என்று கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT