Loading...
டெல்லி CJP போராட்டம்: தடுப்புகளை அகற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் தேவையற்ற இடங்களில் தடுப்புகளை அகற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி CJP போராட்டம்: தடுப்புகளை அகற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
02:49 pm

செய்தி முன்னோட்டம்

தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுவதை தடுப்பதற்காக, நகர் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் போலிஸ் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையில்லாத இடங்களில் தடுப்புகளை வைத்திருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சுதந்திரமான நடமாட்டத்தையும் முடக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள்

163-வது பிரிவு கட்டுப்பாடுகளை திரும்பப் பெற உத்தரவு

நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அவசர விசாரணையை நடத்தியது.

உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்றப் பகுதிகளில் BNSS சட்டப் பிரிவு 163-ன் கீழ் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அமர்வு தெரிவித்தது.

இதன் மூலம் நீதிமன்ற அணுகல் மற்றும் நீதி வழங்கும் நடைமுறைகளுக்கு எந்தவித தடங்கலும் அச்சமும் ஏற்படாமல் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பொதுமக்களின் நடமாட்டத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்ட உரிமை

சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்ட உரிமை

போராட்டம் நடத்தும் உரிமை குறித்துக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மக்களுக்குப் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டது.

அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என நீதிபதிகள் கூறினர். ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டுப் போராடும் உரிமை எவருக்கும் இல்லை எனப் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளையில், வழக்கறிஞர்கள் தங்களது சட்டக் கடமைகளை செய்ய எந்த இடையூறும் வரக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியது.

ADVERTISEMENT

நோட்டீஸ்

அரசு மற்றும் காவல்துறைக்கு நோட்டீஸ்

ஏற்கனவே மெட்ரோ நிலையங்களை முழுமையாக மூடக்கூடாது என்று பிறப்பித்த உத்தரவை மீறியதாக அவமதிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது டெல்லி காவல்துறை, மத்திய உள்துறைச் செயலாளர் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த தடுப்புக் காவல் நடவடிக்கைகள் மற்றும் முடக்கங்கள் குறித்த விரிவான விளக்க அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT