Loading...
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்; முழு நேர அட்டவணை விவரம்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்; முழு நேர அட்டவணை விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
06:22 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம் 4-ல், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து வடபழனி மெட்ரோ நிலையம் வரையிலான 15 கிமீ நீளப் பாதையில் நாளை (அக்டோபர் 11) மாலை முதல் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது. இந்த உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம் மேற்கு சென்னைவாசிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மெட்ரோ நிலையங்கள்

11 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைப்பு

இந்த புதிய வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம் மற்றும் அய்யப்பன்தாங்கள் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

இந்தப் புதிய சேவையின் மூலம் மேற்கு புறநகர் பகுதிகளிலிருந்து நகரத்தின் மையப்பகுதிக்கு விரைவாகப் பயணிக்க முடியும்.

நேர அட்டவணை 

மெட்ரோ ரயில் சேவை நேரங்கள் மற்றும் அட்டவணை

சேவை தொடங்கும் முதல் நாளான நாளை (11.10.2026) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, மறுநாளான அக்டோபர் 12 முதல் தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை இரு திசைகளிலும் தொடர்ச்சியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் இந்த நேர அட்டவணையை அறிந்து தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கடைசி ரயில்

இரவு 9 மணிக்குக் புறப்படும் கடைசி மெட்ரோ ரயில்

நாள்தோறும் பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரண்டு முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 9 மணிக்கு துல்லியமாகப் புறப்படும்.

தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கம் நகரின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திப் பயண நேரத்தைப் பெருமளவில் மிச்சப்படுத்தும்.

ADVERTISEMENT