Loading...
'முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்போம்': பிரதமர் மோடி உறுதி
பிரதமர் மோடி

'முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்போம்': பிரதமர் மோடி உறுதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சென்னையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர், "ஒரு முதலமைச்சராக மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நான் நன்கு அறிவேன். எனவே பிரதமரான பிறகு, ஒவ்வொரு மாநிலமும் தனது இலக்குகளை அடையத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன்." என்று கூறினார்.

தமிழகத்தின் பங்களிப்பு

உற்பத்தித் துறை மற்றும் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு

இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியிலும் பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் தமிழகம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

"கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளது.

இன்று உலக அளவில் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

அதேபோல பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 50 மடங்கும், பொறியியல் ஏற்றுமதியும் புதிய சாதனைகளைப் படைத்து இளைஞர்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி

ரூ.17,000 கோடியில் தூத்துக்குடி துறைமுக மேம்பாடு

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூ.17,000 கோடி முதலீட்டில் சர்வதேசத் தரத்திலான மெகா கன்டெய்னர் மற்றும் பசுமை ஆற்றல் மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.

"இத்திட்டம் நிறைவடையும் போது, உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல்களும் வந்து செல்லும் வசதி உருவாகும்.

இதன் மூலம் தமிழகம் உலகளாவிய தொழில் மற்றும் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும்" என அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத் திறப்பு & முதல்வரின் கோரிக்கைகள்

முன்னதாக, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி - வடபழனி இடையேயான 15 கிமீ உயர்மட்ட பாதையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் பயணச்சீட்டு பெற்று முதலமைச்சர் விஜய்யுடன் ரயிலில் பயணம் செய்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், விமான நிலையம் - கிளம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் இடையேயான மெட்ரோ 3-ஆம் கட்டத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், சென்னை - கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே அதிவேக ரயில் பாதைகளை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT