தமிழகத்தில் தீவிரம் காட்டும் வடகிழக்கு பருவமழை; சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதைவிட ஒரு நாள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதீப் ஜான் X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"சென்னைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகத்தின் உட்பகுதிகளை நோக்கி காற்று வீசுகிறது. இதன் காரணமாக, நேற்று மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் பெய்தது போல, இன்று வட தமிழகத்தில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது".
நீர்ப்பிடிப்புப் பகுதி
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை
"சென்னை நகருக்குள் மழையின் அளவு குறைவாக இருந்தாலும், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது".
"திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களின் உட்பகுதிகளில் இன்று மிகச்சிறப்பான மழை பெய்யக்கூடும்" என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
UAC (Upper Air Circulation) is close to Chennai Today and winds converge into North Tamil Nadu interiors, if yesterday was Western and South TN today, Today it is going to be North TN day. Even the Interior Tamil Nadu is going to see another superb day. Lake Catchment areas of… pic.twitter.com/OrpWHeWgNF
— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2026
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இரட்டை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இதனிடையே, வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த வாரம் தமிழகத்தையொட்டிய வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
அதே காலகட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் மற்றொரு மேலடுக்கு சுழற்சி உருவாகிப் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த இரட்டை வானிலைச் சூழல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.