Loading...
கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்: முழு சிறப்பம்சங்கள்
கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்: முழு சிறப்பம்சங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
01:22 pm

செய்தி முன்னோட்டம்

கோவை காந்திபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை' தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2026-ல் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் விஜய்க்கு, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நண்பகல் 12 மணியளவில் பெரியார் அறிவுலக வளாகத்திற்கு வந்த முதல்வர், முகப்பில் உள்ள தந்தை பெரியாரின் வெண்கலச் சிலை மற்றும் பெரியார் அறிவுலகக் கல்வெட்டைத் திறந்து வைத்து வளாகத்தைப் பார்வையிட்டார்.

சிறப்பம்சங்கள்

8 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட வசதிகள் & சிறப்பம்சங்கள்

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டு 8 தளங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த 'பெரியார் அறிவுலகம்' A மற்றும் B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 350 பேர் அமரக்கூடிய அதிநவீன அரங்கம், அறிவியல் உபகரணங்கள், விண்வெளி அனுபவத்தைப் பெற உதவும் கோளரங்கம் மற்றும் ஸ்பேஸ் லிஃப்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம், தமிழ் மற்றும் ஆங்கில வரலாற்றுப் பிரிவுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேகப் படிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன

உயர் ஆராய்ச்சிப் படிப்பகங்கள் மற்றும் புதிய தொழிலதிபோர்களுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம் இதில் செயல்படும்.

ADVERTISEMENT