Loading...
தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி செக்; மதம் மாறியவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது
மதம் மாறியவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி செக்; மதம் மாறியவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
01:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள், தங்களது முந்தைய சாதி நிலையின் அடிப்படையில் தமிழக அரசின் 'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' இடஒதுக்கீட்டு பலன்களை தானாக கோர முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் பின்டைவாகக் கருதப்படுகிறது. "இந்து சமூக ஒழுங்கிலிருந்து ஒரு நலம்சார்ந்த அல்லது பிற்படுத்தப்பட்ட கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட சமூக முறைக்கு மாறுபவர்கள், மதம் மாறுவதற்கு முந்தைய சமூகப் பின் தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாக கொண்டு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16(4)-ன் கீழ் இடஒதுக்கீட்டைக் கோர முடியாது" என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துகள்

ழக்கின் பின்னணியும் தமிழக அரசின் அரசாணையும்

உச்ச நீதிமன்றம் மேலும், மதமாற்றம் என்பது முந்தைய சாதி அடிப்படையிலான சட்டப்பூர்வ உரிமைகளின் அடிப்படையைத் துண்டித்துவிடுகிறது என்று தனது தீர்ப்பில் அவதானித்துள்ளது.

கடந்த 2024-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(MBC), சீர்மரபினர்(DNC) மற்றும் பட்டியலினத்தவர்கள்(SC) ஆகியோர் இஸ்லாம மதத்திற்கு மாறும்போது, அவர்கள் முஸ்லிம் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள 7 குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் சாதிச் சான்றிதழ் பெற்று 3.5% உள் ஒதுக்கீட்டைப் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது.

தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவம் என்பவர் 2015-ல் இஸ்லாமிற்கு மாறி 'சமீீர் அகமது' எனப் பெயர் மாற்றிக்கொண்டு 'முஸ்லிம் லெப்பை' பிரிவின் கீழ் சான்றிதழ் கோரிய மனுவை வருவாய்த் துறை அதிகாரிகள் நிராகரித்ததையடுத்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

இந்த அரசாணை நிர்வாக உத்தரவுகள் மூலம் established judicial precedents-ஐ மீற முடியாது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் இதனை ரத்து செய்தது.

அதனை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், மதமாற்றம் பெற்றவர்கள் தங்களது முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு உரிமைகளைத் தொடர முடியாது என்ற நிலை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT