Loading...
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்
அக்டோபர் 18 தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
10:49 am

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களைப் பெறும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 18) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ உத்தரவில், "வரும் அக்டோபர் 19(திங்கட்கிழமை) மற்றும் அக்டோபர் 20(செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறைக் காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போலச் செயல்படும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று விடுமுறை

நவம்பர் 21 மாற்று விடுமுறை

ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுவதை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 21 சனிக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு மாற்று விடுமுறையாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் கடைகள் இயங்காது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்றே தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகளில் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT