Loading...
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்: தமிழக அரசு சூப்பர் திட்டம்
கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் அரிசி, பருப்பு விற்பனை

பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்: தமிழக அரசு சூப்பர் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
02:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில், சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள 7.01 கோடி பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போதைய எல்-நினோ தாக்கம் மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக வெளிச்சந்தையில் அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் விலை கண்காணிப்புக் குழுவின் ஆய்வறிக்கையின்படி, 2022-ல் கிலோ ரூ.48-ஆக இருந்த சன்ன ரக அரிசி, 2024-ல் ரூ.57-ஆகவும், நடப்பாண்டு செப்டம்பரில் எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்ட விளைச்சல் குறைவு காரணமாக சராசரியாக ரூ.61 ஆகவும் உயர்ந்துள்ளது. 2025-ல் கிலோ ரூ.114-ஆக குறைந்து காணப்பட்ட துவரம் பருப்பு விலை, செப்டம்பர் மாத நிலவரப்படி சராசரியாக ரூ.134-ஆக உயர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அமுதம் அங்காடி

கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை

விலை உயர்வை சமாளித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 201 கூட்டுறவு கடைகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் 25,000 மெ.டன் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30 வீதம் வார இறுதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது

NAFED நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 500 மெ.டன் துவரம் பருப்பு, 250 அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.130 விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலை விவரம்:

புழுங்கல் பொன்னி அரிசி: ரூ.60/கிலோ

துவரம் பருப்பு: ரூ.130/கிலோ

உளுந்தம் பருப்பு: ரூ.140/கிலோ

பூண்டு: ரூ.240/கிலோ

மல்லி: ரூ.240/ கிலோ

மிளகாய்:ரூ.330/கிலோ

ADVERTISEMENT