Loading...
ரயில்வே ஊழியர்களுக்கு செம நியூஸ்! ரூ.17,951 வரை தீபாவளி போனஸ் என மத்திய அரசு அறிவிப்பு
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு செம நியூஸ்! ரூ.17,951 வரை தீபாவளி போனஸ் என மத்திய அரசு அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் சுமார் 11.4 லட்சம் ஊழியர்களுக்கு 2025-26ஆம் நிதியாண்டிற்கான உற்பத்தி சார்ந்த போனஸாக 78 நாட்களுக்கான ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டிகைக் காலத்தில் மொத்தம் ரூ. 2,009.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு

அதிகபட்ச போனஸ் தொகை

தகுதியுள்ள அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாகப் பணிநபர் ஒருவருக்கு ரூ. 17,951 வரை போனஸ் தொகையாகக் கிடைக்கும்.

தண்டவாள பராமரிப்பாளர்கள், இரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள், நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

செயல்பாடு

ரயில்வேயின் சாதனைப் செயல்பாடு

துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த போனஸ், ஊழியர்களின் பணித்திறனை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

கடந்த 2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதுடன், சுமார் 7.41 பில்லியன் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று சிறப்பான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் இந்த உழைப்பைப் பாராட்டும் வகையில் இந்த போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT