Loading...
MBBS மாணவர்களுக்கு குட் நியூஸ்! முதல் ஆண்டு தேர்வை எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கி NMC உத்தரவு
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேர்வுகளில் ஒரு முக்கியத் தளர்வை அறிவித்துள்ளது NMC

MBBS மாணவர்களுக்கு குட் நியூஸ்! முதல் ஆண்டு தேர்வை எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கி NMC உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
03:06 pm

செய்தி முன்னோட்டம்

NMC, எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேர்வுகளில் ஒரு முக்கியத் தளர்வை அறிவித்துள்ளது. 2019-20 கல்வி ஆண்டில் மற்றும் அதற்கு பிறகு MBBS படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு முதல் தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற கூடுதலாக ஒரு 'மெர்சி அட்டெம்ப்ட்' வழங்கப்பட்டுள்ளது. NMC-யின் 18-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, மாணவர்கள் ஏற்கனவே உள்ள நான்கு முயற்சிகளுடன் சேர்த்து, தற்போது மொத்தம் ஐந்து முயற்சிகளை பயன்படுத்தி முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம். course-ஐ முடிக்க 4 ஆண்டு காலக்கடுவை கடந்திருந்தாலும், மாணவர்களின் சேர்க்கை செல்லத்தக்கதாக இருக்கும் பட்சத்தில் இந்த அட்டெம்ப்ட் பொருந்தும். CRMI காலம் உட்பட எம்பிபிஎஸ் படிப்பை முழுமையாக முடிப்பதற்கான ஒட்டுமொத்த காலம் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

விலக்கு

யாருக்கு இந்த வாய்ப்பு பொருந்தாது?

2019-20 கல்வி ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு சேர்ந்து, ஏற்கனவே கூடுதல் மெர்சி அட்டெம்ப்ட் உட்பட ஐந்து முயற்சிகளையும் முழுமையாகப் பயன்படுத்தித் தோல்வியடைந்த மாணவர்களுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது.

மேலும் அவர்களுக்கு எவ்வித கூடுதல் முயற்சிகளும் வழங்கப்படாது.

கோவிட்-19 பெருந்தொற்றுக் கால இடையூறுகள், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் இதர தனிப்பட்ட கடினமான சூழல்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளர்வானது ஆணையத்தில் நிலுவையில் உள்ள தகுதியான வழக்குகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக "ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் விதிவிலக்கான இடைக்கால" நடவடிக்கையாகும் என்று என்.எம்.சி தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT