இணைய அணுகல் அடிப்படை உரிமை: சிறுவர்களுக்கான வயது வரம்புத் தடையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் ஒட்டுமொத்தத் தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இணையத்தை அணுகுவது சிறுவர்களின் அரசியலமைப்பு சட்டப்பூர்வமான அடிப்படை உரிமை என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அவர்களின் பாதுகாப்பும் இணைய சுதந்திரமும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முழுமையான தடை விதிப்பது சிறுவர்களை சட்டவிரோத இணையதளங்களை நோக்கித் தள்ளும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் அச்சுறுத்தல்
இணையவழி பாலியல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கை!
சிறுவர்களின் உரிமைகளைப் பறிக்காமல், இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கக் கடுமையான நடைமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
இணையத்தில் பரவும் சிறுவர் பாலியல் ஆபாச உள்ளடக்கங்களை விரைவாகக் கண்டறிந்து நீக்க வேண்டும்.
தற்போதுள்ள புகார் அளிக்கும் முறை போதிய பலனைத் தரவில்லை என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் இத்தகைய குற்றகரமான உள்ளடக்கங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.
கண்காணிப்பு அமைப்புகள்
தேசிய தரவுத்தளம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்களை ஒரே நேரத்தில் அனைத்து இணையதளங்களிலிருந்தும் நீக்கத் தேசியத் தரவுத்தளத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹாஷ் மற்றும் URL குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்துத் தளங்களிலும் தானாகவே இத்தகைய உள்ளடக்கங்களைக் கண்டறிய முடியும்.
இருப்பினும், தவறான நீக்கங்களைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளும் இதில் இடம்பெற வேண்டும்.
இதற்கான குறைதீர்ப்பு அமைப்பையும் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் எனத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள்
பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு
சிறுவர்கள் இணைய அச்சுறுத்தப்புகளை பயமின்றி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆரம்பப் பள்ளி நிலையிலிருந்தே இணையப் பாதுகாப்பு குறித்த பாடங்களைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளத் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளும் வயதுக் கட்டுப்பாடுகளை யோசித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.