Loading...
விமானக் கட்டண உயர்விற்கு பூட்டு! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி! இண்டிகோ பங்கு 2% சரிவு
விமானக் கட்டண முறைப்படுத்தல் விதிகள் தயார்

விமானக் கட்டண உயர்விற்கு பூட்டு! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி! இண்டிகோ பங்கு 2% சரிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
08:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விமானப் பயணக் கட்டணங்களை முறைப்படுத்தப் புதிய விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்புதிய விதிகள் முழுமையாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதிகக் கட்டண உயர்வை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

பங்கு விலை சரிவு

இண்டிகோ தாய் நிறுவனப் பங்குகள் 2% சரிவு

மத்திய அரசு புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ள செய்தி பங்குச் சந்தையில் உடனடியாக எதிரொலித்தது.

இதன் காரணமாக விமான சேவை நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதன் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் வர்த்தகத்தில் 2 சதவீதம் வரை சரிந்தன.

அரசின் இக்கட்டுப்பாடுகளால் நிறுவனத்தின் லாப வரம்பு குறையலாம் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் வர்த்தகத்தின் போது பங்குச் சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்துக் காணப்பட்டது.

அரசு நடவடிக்கை

பயணிகளின் புகார்களும் மத்திய அரசின் புதிய நடவடிக்கையும்

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகைக் காலங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வந்தன.

புயல் மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களிலும் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தன.

இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். நாடாளுமன்றக் குழுக்களும் இதுகுறித்துக் கவலை தெரிவித்து இருந்தன.

இதைக் கருத்தில் கொண்டு புதிய விதிகளை அரசு உருவாக்கியுள்ளது. கட்டண உச்சவரம்பு மற்றும் கட்டண நிர்ணய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த புதிய விதிகள் வழிவகுக்கும்.

ADVERTISEMENT

பயணிகளுக்கு நிவாரணம்

விமான பயணிகளுக்குக் கிடைக்கவுள்ள மிகப்பெரிய நிவாரணம்

மத்திய அரசின் இப்புதிய கட்டுப்பாட்டு விதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இப்புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் போது பயணிகளுக்குப் பெரும் நிவாரணம் கிடைக்கும்.

சாதாரண மக்கள் அவசரக் காலங்களில் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.

அதேநேரத்தில் விமான நிறுவனங்களின் லாப வரம்பு குறையக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதனால் பங்குச் சந்தையில் இத்துறை சார்ந்த பங்குகளில் குறுகிய காலத்திற்கு மந்தமான போக்கே நிலவும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT