Loading...
நவம்பரில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்? ஆர்பிஐ இலக்கை மீறும் பணவீக்கம்! ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் எச்சரிக்கை
நவம்பரில் பெட்ரோல், டீசல் விலையேற வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் எச்சரிக்கை

நவம்பரில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்? ஆர்பிஐ இலக்கை மீறும் பணவீக்கம்! ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
08:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலைகள் வரும் நவம்பர் மாதத்தில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைவதற்கு முன்பாக அரசிற்கு உள்ள ஒரே வாய்ப்பு நவம்பர் மாதம் மட்டுமே என்று முதன்மை பொருளாதார நிபுணர் அலெக்சாண்ட்ரா ஹெர்மன் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த நேரிடும்

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாத பணக் கொள்கைக் கூட்டங்களில் வட்டி விகிதங்களைத் தலா 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25%) வரை உயர்த்த வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் ஏற்கனவே 5.54 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலையேற்றம் மேலும் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

பொருளாதாரத் தாக்கம்

இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத் தாக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து அழுத்தம் நிலவி வருகிறது.

ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு டாலர்களை விற்று வந்தாலும், இறக்குமதிச் செலவுகள் அதிகமாக இருப்பதால் கரன்சி மதிப்பில் நிலையான தன்மையைக் கொண்டுவருவது கடினம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், டெல்லியில் நடைபெற்று வரும் அரசியல் போராட்டங்களால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரியளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT