Loading...
அதிமுகவில் இணைகிறாரா தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்: ராஜேந்திர பாலாஜி பேட்டி
நடிகர் தனுஷ் அதிமுகவிற்கு வந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் என ராஜேந்திர பாலாஜி பேச்சு

அதிமுகவில் இணைகிறாரா தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்: ராஜேந்திர பாலாஜி பேட்டி

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
06:43 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பரவி வரும் யூகங்களுக்கு இடையே, அவர் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனுஷின் அரசியல் பிரவேசம் மற்றும் அதிமுகவில் அவர் இணைவது தொடர்பான செய்திகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பக்குவம்

எடப்பாடி பழனிசாமியின் அரசியல்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களை அன்போடு இணைத்துக் கொள்ளும் உயர்ந்த அரசியல் பக்குவம் கொண்ட தலைவராகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

கட்சியின் கொள்கைகளுக்கும் வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எடப்பாடியார் நிச்சயமாக இணைத்துக் கொள்வார்.

இவர் வரலாம், அவர் வரக்கூடாது என்று யாரையும் பிரித்துப் பார்க்கும் வழக்கம் அதிமுகவில் கிடையாது. இயக்கத்தின் நன்மைக்கான நல்ல கருத்துக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படும்." என்றார்.

இளைஞர்களின் ஈர்ப்பு

நடிகர்களுக்கான அறிவுரை

"தற்போது தமிழக இளைஞர்கள் மத்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் தனுஷ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்.

அத்தகைய ஆளுமை கொண்ட தனுஷ் அதிமுகவில் இணைய விரும்பினால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி மனதார வரவேற்போம்.

அதேநேரம் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு முழுநேர மக்கள் பணியில் ஈடுபட வேண்டுமே தவிர தொடர்ந்து படங்களில் நடிக்கக் கூடாது.

இன்று சிலர் சினிமாவிலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள்.

தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்." என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT