Loading...
தமிழகத்தில் உயரும் அரிசி விலை: 2-3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி
தமிழகத்திற்கு தேவையான அரிசி வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம்

தமிழகத்தில் உயரும் அரிசி விலை: 2-3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
02:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. இதற்கிடையே, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான அரிசி வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

விளக்கம்

விலை கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை மற்றும் அமைச்சரின் விளக்கம்

முன்னதாக அரிசி விலை உயரவில்லை என அமைச்சர் கூறியதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், "அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விலை கண்காணிப்புக் குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குள் முறையான அறிவிப்புகள் வெளியாகும்" எனத்தெரிவித்தார்.

"என்னுடைய முழு வாழ்க்கையே ரேஷன் கடைகளில் தான் கழிந்துள்ளது; நாங்களும் வரிசையில் நின்று பொருள்கள் வாங்கிய அடிமட்ட மக்கள்தான் வந்திருக்கிறோம். மக்களின் சிரமங்களை உணர்ந்து இந்த அரசு அனைத்துத் திட்டங்களையும் வகுத்துள்ளது" என அமைச்சர் தெரிவித்தார்.

ADVERTISEMENT