புதுக்கோட்டை, ஈரோட்டிற்கு 2 நாள் பயணமாக பறக்கும் முதல்வர் விஜய்: ரோடு ஷோ, விழா விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்றும், நாளையும் தனி விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றடையும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாக்டர் அல்லது பாதுகாப்பு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ள திருச்சி - புதுக்கோட்டை சாலை வழியாக புதுக்கோட்டையை சென்றடைகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 24.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.
நலத்திட்ட உதவிகள்
ஈரோடு பெருந்துறையில் ரூ. 1,110 கோடி நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ள அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழா நிறைவடைந்ததும் ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்து உரையாடிய பின், இரவே சென்னை திரும்புகிறார்.
நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு விழாவிற்குச் செல்கிறார்.
பெருந்துறை செல்லும் வழியில் செங்கம்பள்ளி பாலம், பெருந்துறை புறவழிச்சாலை, சிப்காட் ரவுண்டானா மற்றும் பணிக்கம்பாளையம் உள்ளிட்ட 7 முக்கிய இடங்களில் ரோடு ஷோ வாயிலாக மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க உள்ளார்.