பெங்களூர் - மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று தொடக்கம்: கட்டணம் மற்றும் வழித்தட விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நாட்டின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான பெங்களூர் - மும்பை இடையே அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார். 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், பெங்களூரில் இருந்து மும்பைக்கான பயண நேரத்தை வெறும் 16 மணி நேரமாக குறைக்கிறது. இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, கலபுரகி, சோலாப்பூர், புனே மற்றும் கல்யாண் ஆகிய முக்கிய நகரங்களின் வழியாக மும்பையை சென்றடையும்.
வசதிகள்
ரயில் கட்டணம் மற்றும் படுக்கை வசதிகள்
இன்று ஒருநாள் மட்டும் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, நாளை காலை 6.15 மணிக்கு மும்பைச் சென்றடையும்.
வரும் நவம்பர் 3-ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படும்.
பெங்களூர் பையப்பனஹள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 11.55 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தைச் சென்றடையும்.
சென்னை ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் பயணிக்க முடியும்.
ரயிலில் தானியங்கி கதவுகள், வெளிப்புற சத்தம் ஊடுருவாத் தொழில்நுட்பம் (Soundproofing), முழுமையான ஏசி வசதி மற்றும் பாதுகாப்புக்கான கவச் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சொகுசு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.