Loading...
தமிழ்நாடு நாள் 2026: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் தமிழ் மக்களுக்கு வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் தமிழக மக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு நாள் 2026: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் தமிழ் மக்களுக்கு வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
12:10 pm

செய்தி முன்னோட்டம்

இன்று நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் தமிழக மக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில்,"தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழக மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள், ஜவுளித் துறை, மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்து வரும் தொழில் துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது". "தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முதல்வர் விஜய்

"தமிழர் பெருமைகளை நிலைநிறுத்த உறுதியேற்போம்"

தமிழ்நாடு நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்து அறிக்கையில்,"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

"தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்" என வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT