Loading...
பெங்களூரில் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 ஐரோப்பியர்கள் பலி; விசாணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
பெங்களூரில் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 ஐரோப்பியர்கள் பலி

பெங்களூரில் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 ஐரோப்பியர்கள் பலி; விசாணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
05:58 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரில் உள்ள பிரபல கான்ராட் நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு ஐரோப்பிய விருந்தினர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் தொடர்பாக, நீச்சல் குளத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரு கான்கிராட் ஹோட்டல் நீச்சல் குளத்தில் விளக்கு சுவிட்ச் ஆன் செய்யப்பட்டபோது எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்து நீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில், லூஃப்தான்சா விமான ஊழியரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் மெக்சிமிலியன் தீஸ் (52) மற்றும் பெங்களூர் ஐபிஎம் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்த சிலோவாக்கியாவை சேர்ந்த யுராஜ் ஹோர்வத் (45) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரணம்

விபத்துக்கான காரணம் என்ன?

நீரில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற மேத்யூ டிசாண்டிஸ் (41) என்ற அமெரிக்க விருந்தினர் மற்றும் ராகுல் திவாரி (28) என்ற ஹோட்டல் ஊழியர் ஆகிய இருவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்தனர்.

நீச்சல் குளத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள LED விளக்குகளுக்கு உயர் மின்னழுத்த ஏசி மின்சாரத்தை குறைந்த மின்னழுத்த டிசி மின்சாரமாக மாற்றும் 'ஸ்விட்ச்-மோட் பவர் சப்ளை' கருவி அல்லது அதன் வயரிங் இணைப்புகளில் ஏற்பட்ட பழுதினால் மின்சாரம் நீருக்குள் கசிந்திருக்கலாம் என மின்சார ஆய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், மின் கசிவை உடனடியாக தடுத்து மின்சாரத்தை துண்டிக்கும் 'எர்த்-லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்' (ELCB) பாதுகாப்பு சாதனம் சரியாக செயல்பட்டதா என்பது குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வழக்குப் பதிவு

ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அல்சூர் காவல் நிலைய போலீசார், ஹோட்டல் நிர்வாகத்தின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 106-ன் கீழ் கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கான்ராட் ஹோட்டல் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT