Loading...
வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'முரசு' புயல்: ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு, எந்தெந்த பகுதிகளில் ரெட் அலர்ட்?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'முரசு' புயல்

வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'முரசு' புயல்: ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு, எந்தெந்த பகுதிகளில் ரெட் அலர்ட்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
08:31 am

செய்தி முன்னோட்டம்

நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் 'அர்னாப்' புயலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு 'முரசு' எனப் பெயரிடப்படுகிறது. தமிழ் சொல்லான 'முரசு' என்ற இப்பெயர் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 22 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வானிலை அறிக்கை

இன்று புயலாக உருமாறுகிறது 'முரசு'

அக்டோபர் 31 இரவு நிலவரப்படி, இமைப்புகள் வலுவடைந்து சென்னைக்கு கிழக்கே சுமார் 830 - 960 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 980 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, இன்று தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் 'முரசு' புயலாக உருமாறும்.

நாளை இது தீவிரப் புயலாக மேலும் வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.

'முரசு' புயல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை/காலையில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நெல்லூர் - நர்சாபூர் இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.

நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கடலோர ஆந்திரா, யானம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT