Loading...
குரூப் 2 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்
குரூப் 2 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்

குரூப் 2 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ். பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்ற இத்தேர்வை சுமார் 3.97 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதியுள்ளனர். இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது. தேர்வெழுத மாநிலம் முழுவதும் 4,89,888 பேருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 3,97,293 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்; 92,595 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதனால் இன்றைய தேர்வில் ஒட்டுமொத்த வருகைப்பதிவு 81.10 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

81.10% தேர்வர்கள் பங்கேற்பு

தேர்வு மையக் கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் 1,647 தேர்வு மையங்களிலும், சென்னையில் மட்டும் 173 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்வு முடிவுகள் 2 மாதங்களுக்குள் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

உதவித் தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடக்கத்தில் 821 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியான நிலையில், பின்னர் இடங்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT