Loading...
ரூ. 35.79 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

ரூ. 35.79 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
01:02 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் விசாரணைச் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் ஆஜராகுமாறு இருவருக்கும் தனித்தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2021 வரை தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) 2021-இல் வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணையைத் தொடங்கியது.

சோதனை

அமலாக்கத்துறை உத்தரவு

விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு மற்றும் நிகழாண்டின் தொடக்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர்.

தற்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சி. விஜயபாஸ்கரும், அவருக்கு அடுத்த வாரம் அவரது மனைவி ரம்யாவும் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT