இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அர்னாப் புயல் கரையை கடந்தது, அடுத்ததாக அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: IMD
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய அர்னாப் அதிதீவிரப் புயல் ஆந்திர மாநிலம் நரசாபுரம் அருகே வெற்றிகரமாக கரையை கடந்துள்ளது.
543 வகை புற்றுநோய் மருந்துகளின் விலை 93% வரை குறைப்பு: நவம்பர் 9 முதல் புதிய விலை அமல்
புற்றுநோய் சிகிச்சைக்கான 543 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
குனோ பூங்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுத்தை உயிரிழப்பு: மத்திய அரசு உயர்மட்ட குழு விசாரணை
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்கா எல்லையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த 19 மாத ஆண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தல்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தேர்வு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக பாஜகவின் மத்திய தேர்தல் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
17/17: தேனி கிளை சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் சிக்கினர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து நள்ளிரவில் தப்பியோடிய 17 விசாரணைக் கைதிகளையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீண்டும் கைது செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொது விடுமுறை அளித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
ரூ.100 கோடி லஞ்ச விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நெருங்கிய தோழி வீட்டில் சென்னை போலீசார் சோதனை
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிட ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு நெருக்கமானவராக கருதப்படும் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் சென்னை இல்லங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை காலை முதல் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது: முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை வியாழக்கிழமை, காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் 3 தனிப்படைகளால் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் குறித்து அவதூறாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வேலூர் மாநகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை சென்னை புழல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாளை (அக்டோபர் 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு: இனி இரவு நேரங்களில் மொபைல் சார்ஜ் செய்யத் தடை விதித்துள்ளது ரயில்வே வாரியம்
ரயில்களில் இரவில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதியை நிறுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசியலில் ட்விஸ்ட்: சசிகலா தொடங்கிய கட்சியிலிருந்து அவரையே நீக்கியது அஇபுதமமுக
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
'அர்னாப்' புயல் எதிரொலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்வு?
தமிழகத்தில் தீவிரமடைந்திருந்த வடகிழக்குப் பருவமழை அர்னாப் புயலின் நகர்வு காரணமாக இன்று முதல் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் SCO மெகா கலாச்சார மாநாடு: பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இந்தியா
SCO அமைப்பின் முதலாவது 'நாகரிக உரையாடல் அரங்கு' எதிர்வரும் நவம்பர் 20 முதல் 22 வரை புதுடெல்லியில் இந்தியா நடத்தவுள்ளது.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் உள்ளதா?
வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் அர்னாப் புயல் கரையேற துவங்கியது; மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' தீவிரப் புயல், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம் கடற்கரை பகுதிகளுக்கு இடையே புதன்கிழமை அதிகாலை முதல் கரையைக்கடக்கத் தொடங்கியுள்ளது.
10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்: தமிழக அரசு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை
தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் ஆண்டுதோறும் 10,000 தகுதியுள்ள பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக, 2026-27ஆம் நிதியாண்டிற்கு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
தேனி சிறை உடைப்பு: தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை
தேனி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரைத் தமிழ்நாடு காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் கைது செய்துள்ளனர்.
ஒரு யூனிட் ரூ.41-ஆ? வெளிச்சந்தை மின்சார டெண்டரை ரத்து செய்து அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
தமிழ்நாட்டில் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யக் கோரப்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா வாக்காளர் பட்டியல் வெளியீடு: SIR மூலம் 1 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம்
கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கைக்கு பிறகு, அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
தவெக முதல் மாநாடு நடந்து 2 ஆண்டுகள் நிறைவு: அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி பதிவு
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதலாவது மாநில மாநாடு மற்றும் கொள்கைத் திருவிழா விக்கிரவாண்டி வி. சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தவெக-வின் கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளருமான டாக்டர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம்: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு: முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் 'சியாங்' தடுப்பணைத் திட்டம்
திபெத்தில் உள்ள யார்லுங் சாங்போ ஆற்றின் குறுக்கே சீனா பிரம்மாண்ட நீர்மின் திட்டத்தைக் கட்டி வரும் நிலையில், இந்தியாவின் நீர் பாதுகாப்பு மற்றும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த அருணாச்சலப் பிரதேசத்தில் 11,200 மெகாவாட் திறன் கொண்ட 'சியாங் மேல்நிலை பன்நோக்குத் திட்டம்' குறித்த ஆய்வுகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு
வருகின்ற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்
POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேனி சிறை உடைப்பு விவகாரம்: 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே அறையை சேர்ந்த 17 விசாரணை கைதிகள் சிறை காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை காவலர்கள் 9 பேரை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 28) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷ்: முதல் வகுப்பு சிறை மற்றும் சிறப்பு உணவு வழங்க நீதிமன்றம் ஆணை
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை லஞ்ச ஒழிப்புச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் ஆவின் நெய், தயிர், இனிப்புகள் விலை உயர்வு: புதிய விலை பட்டியல் இதோ
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், தனது பால் உப பொருட்களான நெய், தயிர், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது.
₹27 கோடி போர்க்கால நிதி ஒதுக்கீடு, 53 ரயில்கள் ரத்து: அர்னாப் புயலை எதிர்கொள்ள தயாராகும் ஆந்திரா, ஒடிசா
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அர்னாப்' புயல் தீவிரமடைந்து, அக்டோபர் 28 காலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடலோரப் பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிகக் கடுமையான புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
SIR முறைகேடு மற்றும் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் மீதான மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
வாக்காளர் பட்டியல் SIR தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
வலிப்பு வந்தது போல நாடகமாடி தேனி கிளைச் சிறையை உடைத்து 17 கைதிகள் தப்பியோட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணை கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாத தடை நீட்டிப்பு
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் 20-இல் சிறப்பு டெட் தேர்வு: நாளை (அக்.27) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அக்டோபர் 31-ல் தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி, வரும் அக்டோபர் 31-ஆம் தேதியன்று திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இனி ரிசர்ச் பேப்பர் எழுதத் தேவையில்லை; ரூ.10 லட்சம் சம்பாதித்தால் பிஎச்டி பட்டம்; ஐஐடி ரோபார் அறிவிப்பு
ஐஐடி ரோபார், உயர்கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் சார்ந்த பிஎச்டி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் தீவிரமடையும் 'அர்னாப்' புயல்: 4 மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் மேலும் தீவிரமடைந்து மிகக் கடுமையான புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.