Loading...
ரூ.100 கோடி லஞ்ச விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நெருங்கிய தோழி வீட்டில் சென்னை போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நெருங்கிய தோழி வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ரூ.100 கோடி லஞ்ச விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நெருங்கிய தோழி வீட்டில் சென்னை போலீசார் சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
04:32 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிட ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு நெருக்கமானவராக கருதப்படும் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் சென்னை இல்லங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை காலை முதல் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அக்டோபர் 26 அன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சோதனை

சண்முகபிரியா வீட்டில் தீவிரச் சோதனை

இவ்வழக்கில் பிடி அரசகுமாரன், முத்துக்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'Aphrodite Drapes' என்ற துணிக்கடையை நடத்தி வரும் தொழிலதிபர் சண்முகபிரியாவுக்கு இந்த நிதி மோசடியில் நேரடித் தொடர்பு இருப்பதாக ஓட்டுநர் உமாசங்கர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை முடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராக ஸ்ரீ விலாஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சண்முகபிரியாவின் வங்கிக் கணக்குகள், நிதிப் பரிவர்த்தனைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT