Loading...
தவெக முதல் மாநாடு நடந்து 2 ஆண்டுகள் நிறைவு: அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி பதிவு
தவெக) முதலாவது மாநில மாநாடு நடைபெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

தவெக முதல் மாநாடு நடந்து 2 ஆண்டுகள் நிறைவு: அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

எழுதியவர் Vasuki
Oct 27, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதலாவது மாநில மாநாடு மற்றும் கொள்கைத் திருவிழா விக்கிரவாண்டி வி. சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தவெக-வின் கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளருமான டாக்டர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நாள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாமல், இந்திய அரசியல் வரலாற்றிலும் ஒரு திருப்புமுனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வி. சாலை மாநாடு

விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய வி. சாலை மாநாடு

தனது பதிவில் மாநாட்டு நினைவுகளைப் பகிர்ந்துள்ள அவர், "சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2024 அக்டோபர் 27 அன்றுதான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் தவெக-வின் பிரம்மாண்டமான கொள்கைத் திருவிழா நடைபெற்றது".

"100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் பேரெழுச்சிக்கு இடையே நமது கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது".

"'ஒரு நடிகர் அரசியலில் என்ன செய்துவிட முடியும்? அவரிடம் என்ன கொள்கை இருக்கப் போகிறது?' என்று புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது அன்றைய மாநாடும், நமது தலைவரின் முதல் அரசியல் உரையும் ஆகும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றிப் பயணம்

தாறுமாறான ஆட்டம் அல்ல, தத்துவத்துடன் கூடிய ஆட்டம்

மேலும், "அன்று நமது தலைவர் ஆற்றிய உரையில், 'இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல... தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்' என்று கழகத்தின் அரசியல் பாதையைத் தீர்க்கமாக வரையறுத்தார்".

"'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த சமத்துவத் தத்துவத்தின் வழியில், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது ஆட்சி மாற்றமும் அரசியல் மாற்றமும் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது".

"கொள்கைத் தலைவர்களின் வழிகாட்டலில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கிய இந்த வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடர்ந்து நீடிக்கும்" என்று அமைச்சர் அருண்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT