Loading...
₹27 கோடி போர்க்கால நிதி ஒதுக்கீடு, 53 ரயில்கள் ரத்து: அர்னாப் புயலை எதிர்கொள்ள தயாராகும் ஆந்திரா, ஒடிசா
அர்னாப் புயலை எதிர்கொள்ள தயாராகும் ஆந்திரா, ஒடிசா

₹27 கோடி போர்க்கால நிதி ஒதுக்கீடு, 53 ரயில்கள் ரத்து: அர்னாப் புயலை எதிர்கொள்ள தயாராகும் ஆந்திரா, ஒடிசா

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
09:53 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அர்னாப்' புயல் தீவிரமடைந்து, அக்டோபர் 28 காலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடலோரப் பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிகக் கடுமையான புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நிதி ஒதுக்கீடு

₹27 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 4,711 கர்ப்பிணிகள் மீட்பு

ஆந்திரப் பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய 20 மாவட்டங்களில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ₹27 கோடி நிதியை விடுவித்துள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 15 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்பேரில், பிரசவக் காலம் நெருங்கியுள்ள 4,711 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பான மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் தெற்குப் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மையம்

53 ரயில்கள் ரத்து மற்றும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம்

பாதுகாப்பு காரணங்களுக்காகத் தெற்கு கடலோர ரயில்வே மண்டலம் 53 ரயில்களை ரத்து செய்துள்ளதுடன், நிலைமையைக் கண்காணிக்க 24/7 போர்க்கால கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.

முக்கிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைப்பட்டு, ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு உடனடியாக கட்டணத்தை திரும்பப் பெற கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் அவசரகாலத் தேவைகளுக்காக மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு சீரமைப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

ADVERTISEMENT