வங்கக்கடலில் தீவிரமடையும் 'அர்னாப்' புயல்: 4 மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் மேலும் தீவிரமடைந்து மிகக் கடுமையான புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. IMD வெளியிட்டுள்ள தகவலின்படி, விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது, செவ்வாய்க்கிழமை காலை அல்லது மதியத்திற்குள் ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே உள்ள யானம் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகம் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும்.
தயார்நிலை
பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலை
மத்திய கேபினட் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் மீட்புப் பணிகளுக்கு உடனடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளன.
ராணுவம், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 29 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உட்படத் தமிழ்நாட்டின் 9 பிரதான துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.