தேனி சிறை உடைப்பு: தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை
செய்தி முன்னோட்டம்
தேனி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரைத் தமிழ்நாடு காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 4 கைதிகளை பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நேற்று இரவு, தேனி சப்-ஜெயிலில் கைதி ஒருவருக்கு வலிப்பு வந்தது போல நாடகமாடியுள்ளனர். சிறைக் காவலர்கள் கதவைத் திறந்தபோது, 7 கொலை வழக்குக் குற்றவாளிகள் உட்பட 17 கைதிகளும் சேர்ந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பினர்.
தேடுதல் வேட்டை
ரெட் அலர்ட் மற்றும் தேடுதல் வேட்டை
சம்பவத்தையடுத்து தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதரி தலைமையில் தேடுதல் வேட்டை முடுக்கிடப்பட்டது.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலமும், சோதனைச் சாவடிகள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கேரள மாநில காவல்துறையின் உதவியும் கோரப்பட்டது.
மாநிலம் தழுவிய தீவிர நடவடிக்கையால், தப்பியோடியவர்களில் 13 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்துப் பிடிக்கப்பட்டனர்.
தற்போது தலைமறைவாக உள்ள எஞ்சிய 4 கைதிகளை பிடிக்க தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்.”
— Tamil Nadu Police - South Zone (@SouthZoneTNpol) October 27, 2026
Using Drone Surveillance, Police rapidly identified and secured escaped prisoners in Theni District pic.twitter.com/ohJjPa8AEu