Loading...
தமிழக அரசியலில் ட்விஸ்ட்: சசிகலா தொடங்கிய கட்சியிலிருந்து அவரையே நீக்கியது அஇபுதமமுக
வி.கே. சசிகலாவை நீக்குவதாக அஇபுதமமுக கட்சியின் நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்

தமிழக அரசியலில் ட்விஸ்ட்: சசிகலா தொடங்கிய கட்சியிலிருந்து அவரையே நீக்கியது அஇபுதமமுக

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
11:44 am

செய்தி முன்னோட்டம்

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அஇபுதமமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவனர் சக்கரவர்த்தி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக அரசின் செயல்பாடுகளையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து இக்கூட்டத்தில் இரு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். 2026-இல் பொதுச் செயலராக பொறுப்பேற்ற சசிகலா, தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும், அவரைத் தொடர்புகொள்ளவோ சந்திக்கவோ முடியவில்லை என்றும் சக்கரவர்த்தி குற்றம்சாட்டினார்.

பொதுக்குழு

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மற்றும் பொதுக்குழு அறிவிப்பு

சசிகலாவை பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவின் நீக்கம் அதிகாரப்பூர்வமாகப் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படும்.

கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முடுக்கிவிடவும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவும் புதிய பொதுச்செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என சக்கரவர்த்தி கூறினார்.

ADVERTISEMENT