Loading...
இனி ரிசர்ச் பேப்பர் எழுதத் தேவையில்லை; ரூ.10 லட்சம் சம்பாதித்தால் பிஎச்டி பட்டம்; ஐஐடி ரோபார் அறிவிப்பு
ஸ்டார்ட்அப் உருவாக்கி ரூ.10 லட்சம் சம்பாதித்தால் பிஎச்டி பட்டம் வழங்குவதாக ஐஐடி ரோபார் அறிவிப்பு

இனி ரிசர்ச் பேப்பர் எழுதத் தேவையில்லை; ரூ.10 லட்சம் சம்பாதித்தால் பிஎச்டி பட்டம்; ஐஐடி ரோபார் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

ஐஐடி ரோபார், உயர்கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் சார்ந்த பிஎச்டி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இணையும் முனைவர் பட்ட மாணவர்கள், பல ஆண்டுகள் செலவிட்டு தடிமனான ஆய்வுத் தாள்களை (Thesis) எழுத வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தொழிற்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு, புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் தங்களின் முனைவர் பட்டத்தைப் பெற முடியும்.

பிஎச்டி பட்டம்

ரூ.10 லட்சம் வருவாய் அல்லது காப்புரிமை மூலம் பிஎச்டி பட்டம்

இந்த புதிய மாதிரியின் கீழ் மாணவர்கள் பிஎச்டி பட்டம் பெற மூன்று வழிகள் தரப்பட்டுள்ளன.

ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கு முழுமையான காப்புரிமை பெறுதல், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி பொருள் விற்பனை மூலம் ₹10 லட்சம் ஈட்டுதல் அல்லது தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தை டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மாற்றீடு செய்து ராயல்டி பெறுதல் ஆகியவையே அவை.

இவற்றில் ஏதேனும் ஒன்றை சாதித்தாலே மாணவர்களுக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்படும் என ஐஐடி ரோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆய்வுக் கட்டுரை

ஆய்வுக் கட்டுரை அழுத்தங்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சி

பாரம்பரியமாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் உள்ள அதிகப்படியான மன அழுத்தத்தைக் குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தால் தரவு கையாளுதல் மற்றும் திருட்டு போன்ற தவறான நடைமுறைகள் அதிகரிப்பதாக ஐஐடி ரோபாரின் அசோசியேட் டீன் சாரங் கும்ஃபடேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்தகைய முறைகள், இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் போலி ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

எதிர்கால மாற்றம்

இந்தியாவில் உயர்கல்வி ஆராய்ச்சியின் எதிர்கால மாற்றம்

மத்திய அரசின் தகவல்களின்படி இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 31,383 பேருக்கு பிஎச்டி பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த ஆய்வுகளின் முடிவுகள் ஆய்வகங்களை விட்டு வெளியேறிச் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பயன்படுகின்றன என்பது கேள்விக் குறியாகவே இருந்தது.

தற்பொழுது ஐஐடி ரோபார் எடுத்துள்ள இந்த முயற்சி, இந்தியாவில் உள்ள பிற உயர்கல்வி நிறுவனங்களையும் இத்தகைய நடைமுறைக்கு மாற்ற ஊக்குவிக்கும்.

இதன் மூலம் இந்தியாவின் ஆராய்ச்சி நிலப்பரப்பு வெறும் பட்டங்களை வழங்குவதோடு நிற்காமல், நாட்டின் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக மாறும்.

ADVERTISEMENT