Loading...
நாளை முதல் ஆவின் நெய், தயிர், இனிப்புகள் விலை உயர்வு: புதிய விலை பட்டியல் இதோ
நாளை முதல் ஆவின் நெய், தயிர், இனிப்புகள் விலை உயர்வு

நாளை முதல் ஆவின் நெய், தயிர், இனிப்புகள் விலை உயர்வு: புதிய விலை பட்டியல் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
10:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், தனது பால் உப பொருட்களான நெய், தயிர், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆவின் பொருட்களின் இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி: 1 லிட்டர் நெய் (ஜார்): ரூ. 700-லிருந்து ரூ. 780ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 மி.லி. நெய்: ரூ. 365-லிருந்து ரூ. 400ஆக உயர்ந்துள்ளது. 200 மி.லி. நெய்:ரூ. 160-லிருந்து ரூ. 180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. தயிர்:ரூ. 35-லிருந்து ரூ. 40-ஆக மாற்றப்பட்டுள்ளது.

புதிய விற்பனை விலை

இனிப்பு மற்றும் பானங்களின் புதிய விற்பனை விலை

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் தயாரிக்கும் பிரத்யேக இனிப்புகள் மற்றும் பால் பானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மைசூர்பா (250 கிராம்): ரூ. 140-லிருந்து ரூ. 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மில்க் ஷேக் (200 மி.லி.):ரூ. 30-லிருந்து ரூ. 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பால்கோவா: 100 கிராம் பால்கோவா ரூ. 60 ஆகவும், 250 கிராம் ரூ. 150 ஆகவும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வுகள் அனைத்தும் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT