மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தல்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தேர்வு
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக பாஜகவின் மத்திய தேர்தல் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தனது மாநிலங்களவை எம்பி பதவியையும், மத்திய இணை அமைச்சர் பதவியையும் கடந்த அக்டோபர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்த இடத்திற்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 5 கடைசி நாளாகும். நவம்பர் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அரசியல் பின்னணி
ஹர்தீப் சிங் பூரியின் அரசியல் பின்னணி
1974-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியான ஹர்தீப் சிங் பூரி, 2009 முதல் 2013 வரை ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
உத்தரப் பிரதேச மாநிலங்களவை எம்பியாக உள்ள அவரது பதவிக் காலம் வரும் நவம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
உத்தரப் பிரதேசத்தில் அவர் மீண்டும் பரிந்துரைக்கப்படாத நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பாஜக பலமான பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாாவது உறுதியாகியுள்ளது.