Loading...
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
02:25 pm

செய்தி முன்னோட்டம்

வருகின்ற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் போனஸ் நடைமுறையைப் பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் பணியாற்றும் 'சி' பிரிவு மற்றும் 'பி' பிரிவைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு இந்த தீபாவளி போனஸ் வழங்கப்படவுள்ளது. 30 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான தொகையை ஊழியர்கள் போனஸாக பெறுவார்கள்.

தகுதி

தகுதி வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்

இந்த போனஸ் சலுகையை பெறுவதற்கு அரசு சில முக்கியத் தகுதி நிபந்தனைகளை வகுத்துள்ளது.

அதன்படி, 2026 மார்ச் 31-ஆம் தேதி அன்றைய தேதியில் பணியில் இருந்திருக்க வேண்டும்.

மேலும் 2025-26-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

போனஸ் கணக்கீட்டிற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ. 7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தகுதியுடைய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 6,908 வரை போனஸ் தொகையாக கிடைக்கும்.

ADVERTISEMENT