சீனாவின் அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் 'சியாங்' தடுப்பணைத் திட்டம்
செய்தி முன்னோட்டம்
திபெத்தில் உள்ள யார்லுங் சாங்போ ஆற்றின் குறுக்கே சீனா பிரம்மாண்ட நீர்மின் திட்டத்தைக் கட்டி வரும் நிலையில், இந்தியாவின் நீர் பாதுகாப்பு மற்றும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த அருணாச்சலப் பிரதேசத்தில் 11,200 மெகாவாட் திறன் கொண்ட 'சியாங் மேல்நிலை பன்நோக்குத் திட்டம்' குறித்த ஆய்வுகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஜூலை மாதத்தில், திபெத் பிராந்தியத்தில் $167.8 பில்லியன் மதிப்பிலான 60,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டப் பணிகளைச் சீனா தொடங்கியது. பிரம்மபுத்திராவின் மேல்நிலைப் பகுதியில் சீனா கட்டும் இந்த அணை, இந்திய எல்லையான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நீர் தட்டுப்பாட்டை உருவாக்கக்கூடும் என்ற கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.
சியாங் திட்டம்
இந்தியாவின் தடுப்பரண்: சியாங் திட்டம்
சீனாவின் அணைக்கு நீர்நிலைத் தடுப்பரணாகப் பயன்படும் வகையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் ஆற்றின் குறுக்கே 280 முதல் 300 மீட்டர் உயரமும், 9.2 பில்லியன் கன மீட்டர் நீர் தேக்கும் திறனும் கொண்ட அண கட்ட முன்மொழியப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டால், இந்த அணை நீரைக் கட்டுப்படுத்தித் தேக்கி வைத்து, கீழ்நிலைப் பகுதிகளில் பெரிய அளவிலான வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
வெள்ளக் கட்டுப்பாட்டுடன் சேர்ந்து பிராந்தியத்தின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் எதிர்ப்பு
சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் உள்ளூர் எதிர்ப்பு
இத்திட்டம் தற்போது ஆரம்பகட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே உள்ளது.
திட்டத்திற்காக நிலம் மூழ்குவது மற்றும் மக்கள் இடம்பெயர்வது தொடர்பாக உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகே திட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டு தெரிவித்துள்ளார்.