Loading...
நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷ்: முதல் வகுப்பு சிறை மற்றும் சிறப்பு உணவு வழங்க நீதிமன்றம் ஆணை
அன்பில் மகேஷை புழல் சிறையில் அடைக்க சென்னை லஞ்ச ஒழிப்புச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷ்: முதல் வகுப்பு சிறை மற்றும் சிறப்பு உணவு வழங்க நீதிமன்றம் ஆணை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
10:55 am

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை லஞ்ச ஒழிப்புச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நீதிபதி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். முன்ஜாமீன் தள்ளுபடிக்கு முன்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வழக்குத் தொடர ஆளுநரின் முன்அனுமதி பெறப்படவில்லை எனவும் திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் மறுத்தார். மேலும், சான்றுகள் உள்ளதால் காவலில் வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

காவல்

முதல் வகுப்பு சிறை மற்றும் சிறப்பு உணவு அனுமதி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி அன்பில் மகேஷை நவம்பர் 6 வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முதல் வகுப்புச் சிறை மற்றும் எண்ணெய் இல்லாத உணவு வழங்க சிறை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

நள்ளிரவு 1:30 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அன்பில் மகேஷ் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே திரண்டிருந்த திமுகவினர் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT