Loading...
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
10:03 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது முதல் 1.8 கி.மீ தூரத்திற்குக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ.12-ம் வசூலிக்கப்பட்டு வந்தது.

பின்னணி

13 ஆண்டுகாலக் காத்திருப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வு, காப்பீட்டுக் கட்டணங்கள், வாகனப் பராமரிப்புச் செலவு மற்றும் உதிரிபாகங்களின் விலை ஏற்றம் ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி ஓட்டுநர்கள் தொடர்ந்து கட்டண உயர்வை வலியுறுத்தி வந்தனர்.

பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலன்களை சமநிலைப்படுத்தி புதிய கட்டணத்தை முறைப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றமும் 2022-இல் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

விவரங்கள்

புதிய கட்டண விகிதங்களின் விவரங்கள்

மாநிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புதிய விதிகளின்படி கட்டணங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, குறைந்தபட்சக் கட்டணம் முதல் 1.8 கி.மீ தூரத்திற்கு ரூ.50.

1.8 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25.

இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரையிலான பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணம் தாமதமாகும் போது காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீட்டர் கட்டண முறையைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT